Tamil News
Home செய்திகள் சுதந்திரதின கரிநாளுக்கு வலுச் சோ்ப்போம் – தமிழரசுக் கட்சித் தலைவா் சிறீதரன் அழைப்பு

சுதந்திரதின கரிநாளுக்கு வலுச் சோ்ப்போம் – தமிழரசுக் கட்சித் தலைவா் சிறீதரன் அழைப்பு

எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

“கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67 வருடங்கள் கடந்தும், இந்த நாட்டில் தமிழர்களின் இறைமை இன்றளவும் அங்கீகரிக்கப்படவில்லை. தமது பூர்வீக மண்ணில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை நிலைநிறுத்த, அரச கட்டமைப்புகளுக்கும் எதிராக எல்லாவழிகளிலும் போராடவேண்டியுள்ளது.

இந்த நிலையில், மக்களது அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், எமது மக்களின் குரலாகவுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவரை, ஈழத்தமிழர்களை இறைமையுள்ள தேசிய இனமாக இலங்கைத் தேசம் அங்கீகரிக்காதவரை, இந்த நாட்டின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாளே.

இந்தப் போராட்டத்தில், அரசியற் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகள் எவையுமற்று எமது இனத்தின் உரிமைக்கான ஏகோபித்த குரலாக எல்லோரும் இணைந்து, இதனை ஒரு மக்கள் திரட்சி மிக்க போராட்ட வடிமாக எழுச்சிபெறச் செய்ய வேண்டுமென“ என சிறீதரன் இது தொடா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுறள்ளார்.

Exit mobile version