Tamil News
Home உலகச் செய்திகள் சீனாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி

சீனாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி

சீனாவின் இந்த வருட பொருளாதார வளர்ச்சி 6.8 விகிதத்தால் கடந்த 3 மாதங்களில் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதன் பொருளாதார வளர்ச்சி 6.8 விகிதம் குறைவானது.

2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டின் இறுதி 3 மாதங்களில் அதன் பொருளாதாரம் 9.8 விகிதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது.

சில்லறை விற்பனை 15.8 விகிதத்தால் கடந்த மார்ச் மாதமும், 20.5 விகிதத்தால் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதமும் வீழ்ச்சி கண்டிருந்தது. வீட்டு விற்பனை 7.7 விகிதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது.

புதிய கட்டுமானத்துறை மார்ச் மாதம் 27 விகிதத்தாலும், ஜனவரி பெப்ரவரி மாதம் 44.9 விகித்தாலும் வீழ்ச்சி கண்டிருந்தது.

இதனிடையே, வூகன் மாநிலத்தில் வைத்தியசாலைகள் தவிர்ந்த வீடுகள் மற்றும் வயோதிபர் இல்லங்களில் இடம்பெற்ற மரணங்களின் விபரத்தை சீனா வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இறப்பு எண்ணிக்கை 1290 ஆல் உயர்ந்துள்ளது.

Exit mobile version