Tamil News
Home செய்திகள் சீனாவின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இலங்கை வருகிறார் – கப்பல் விவகாரம் ஆராயப்படலாம்

சீனாவின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இலங்கை வருகிறார் – கப்பல் விவகாரம் ஆராயப்படலாம்

சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் துணை அமைச்சரும், சீன மத்தியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட இராஜதந்திரியுமான சன் ஹையானவே (Sun Haiyan) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். எதிர்வரும் 23ஆம் தேதி அவர் இலங்கை வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை சிங்கப்பூருக்கான சீனத் தூதராகப் பணியாற்றிய அவர், பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் தீர்க்கமான பங்கை வகித்தவர் என அறியப்படுகிறார்.

எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கான அவரது பயணத்தின் போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை அவர் சந்திக்கவுள்ளதாகவும், சீனாவிடம் இலங்கை பெற்றுள்ள கடனையை செலுத்துவது குறித்தும் இதன்போது இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனத் தெரிய வருகிறது.

சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படாத சூழல் மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள தருணத்திலேயே சன் ஹையானேவின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.

சன் ஹையனின் இலங்கை பயணத்தின் போது இருதரப்பு உறவுகளை மேலும் ஆழமாக கட்டியெழுப்பக் கூடிய சாத்தியமான விடயங்கள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட உள்ளது.

Exit mobile version