Tamil News
Home உலகச் செய்திகள் சீனாவின் எல்லையில் உள்ள நகரத்தை மியான்மார் இழந்தது

சீனாவின் எல்லையில் உள்ள நகரத்தை மியான்மார் இழந்தது

சீனாவிற்கு இருகில் உள்ள நகரத்தை கடும் சமரின்ன பின்னர் மியான்மார் அரசியிடம் இருந்து ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவமானது 2021 ஆம் ஆண்டு இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது. சீனாவின் யுனைன் மாநிலத்திற்கு அருகில் உள்ள இந்த நகரம் சீனாவுக்கும் மியான்மாருக்கும் இடையிலான 1.8 பில்லியன் டொலர் வர்த்தகத்தின் முக்கிய பாதையாகும்.

மியாமன்மாரின் வடக்கு பகுதியில் உள்ள சான் மாநிலத்தில் கடந்த பல நாட்களாக அரச படையினருக்கும், 3 இனங்களை சேர்ந்த குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் அந்த பகுதியில் இருந்து அரச படையினர் வெளியேறியதாக மியான்மார் அரசின் பேச்சாளர் கடந்த புதன்கிழமை (1) தெரிவித்துள்ளார்.

தாம் வாழும் பிரதேசங்களுக்கு சுயாட்சி வேண்டி இந்த இனங்களைச் சேர்ந்த குழுவினர் போராடி வருகின்றனர். அவர்களில் ஏறத்தாள 15,000 படையினர் உள்ளதாக நம்பப்படுகின்றது. அண்மைக்காலங்களாக இடம்பெற்றுவரும் சண்டைகளில் தாம் சீனாவுக்கும் மியான்மாருக்கும் இடையிலான பல காவல்நிலைகள் மற்றும் வீதிகளை கைப்பற்றியுள்ளதாக இந்த குழுக்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version