Tamil News
Home செய்திகள் சீனாவினால் சிறிலங்கா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது – குற்றஞ்சாட்டுகின்றார் சந்திரிகா

சீனாவினால் சிறிலங்கா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது – குற்றஞ்சாட்டுகின்றார் சந்திரிகா

 

“சீனாவினால்  சிறிலங்கா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, “தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை நாட்டை மோசமான நிலைமைக்கே கொண்டுவந்துவிட்டுள்ளது” எனவும் தெரிவித்திருக்கின்றார்.

விஜயகுமாரதுக்கவின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே சந்திரிகா இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது :

‘முன்னாள் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்பிய இந்த நாடு இப்போது மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலையிலிருந்து முன்னேறிச் செல்ல முடியாத நிலையில் நாடு உள்ளது. படித்த, ஊழலற்ற இளைய தலைமுறையைச் சேர்ந்த அரசியல்வாதிகளே இன்று நாட்டுக்குத் தேவையாகவுள்ளனர். எமது வெளியுறவுக் கொள்கை அழிவுப் பாதைக்கே நாட்டைக் கொண்டு சென்றிருக்கின்றது.

இலங்கை இன்று சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. சீனா மீது எனக்கு எந்தவிதமான கோபமும் இல்லை. ஆனால், இந்த நாட்டில் சீனாவுக்குக் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றதது’ எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version