சீனர்களுக்கு உணவு இல்லை! ஸ்ரீலங்காவில் உணவகம் ஒன்று எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலங்கையில் தங்கியிருக்கும் சீனப் பிரஜைகளுக்கு தற்காலிகமாக உணவு வழங்கப்படாது என கொழும்பில் அமைந்துள்ள உணவகம் என்று அறிவித்துள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்போதுவரை 170பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா தாக்கத்தினால் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சீனப் பிரஜைகள் பயணிக்கும் வாகனங்களில் இலங்கையர்கள் ஏறுவதற்கே அச்சம் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை மக்களிடையே தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்கிடையில், உணவகம் ஒன்றும் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இதன்படி, கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று சீனர்களுக்கு புதுக்கட்டுப்பாடு விதித்துள்ளது.

சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என்கிற அறிவித்தல் பலகை அந்த உணவகத்தின் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சீனப் பிரஜைகள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக இலங்கையர்கள் நினைக்கக் கூடாது என்று சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டதுடன், இலங்கை மக்கள் இது தொடர்பில் சரியான புரிதலை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.