சிறைச் சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

போரின் போது கைது செய்யப்பட்ட 20 பேர் தற்போது, 14 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ர்ஸ் நிர்மலநாதன், அவர்களையும் விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் போர் காலத்தில்  கைது செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களில் சிலரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தற்போது 22 பேரே சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

விசாரணைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவர்களில் சிலர் நீண்ட காலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதை இராஜாங்க அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

எஞ்சியுள்ள கைதிகளின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கு ஏற்கனவே சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.