Tamil News
Home செய்திகள் சிறீலங்க அரச தலைவர் தேர்தலில் தமிழர்கள் – சிங்களத் தலைவர்களை புறம்தள்ளும் முடிவு தமிழ்...

சிறீலங்க அரச தலைவர் தேர்தலில் தமிழர்கள் – சிங்களத் தலைவர்களை புறம்தள்ளும் முடிவு தமிழ் மக்கள் கையில்

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

2019 ஜனாதிபதி தேர்தலிற்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை முடிவடைந்துள்ளது. மொத்தமாக 41பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இன்று நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை முடிவடைந்தது. நாளை காலை 11 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

இன்று 12 மணியுடன் நிறைவடைந்த கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லைக்குள் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதில் நால்வர் தமிழ் மொழிமூல வேட்பாளர்கள், பஷீர் சேகுதாவுத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, எம்.கே.சிவாஜிலிங்கம், ஊடகவியலாளர் குணரத்தினம் ஆகியோரே அவர்கள் ஆவர்.

சிறீலங்க அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் எல்லா சிங்களத் தலைவர்களும் தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களே. எனவே ஒருவரை இனப்படுகொலையாளி என்று விழிப்பதன் மூலம் நாம் ஏனைய சிங்களத் தலைவர்களுக்கு வெள்ளையடிப்பதற்கு முற்பட்டு நிற்கின்றோம் என யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அரசியல் அவதானி ஒருவர் இலக்கு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.

எனவே நாம் இந்த தடவை தமிழ் வேட்பாளருக்கு எமது வாக்குகளை அளிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களின் ஏமாற்றுத் தனங்களுக்கும் பெளத்த துறவிகளின் நில ஆக்கிரமிப்புக்கும் ஒரு எச்சரிக்கையை விடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Exit mobile version