சிறீலங்காவுக்கு தடுப்பு மருந்து உதவி – இந்தியா – சீனா போட்டி

கோவிட்-19 இற்கான தடுப்பு மருந்துகளை சிறீலங்காவுக்கு வழங்குவதில் இந்தியா மற்றும் சீனாவக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரச தலைவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது அதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என சீனாவுக்கான சிறீலங்கா தூதுவர் பாலித கோகொனா தெரிவித்துள்ளார்.

அதேசமயம், சிறீலங்கா அரச தலைவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி முன்வந்துள்ளார். முன்னனி பணியாளர்களின் பாவனைக்காக இந்த மருந்துகள் வழங்கப்படவுள்ளதாக சிறீலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசெலா குணவர்த்தனா தெரிவித்துள்ளார்.