சிறீலங்கா செல்லும் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

சீனாவின் நட்பு நாடான சிறீலங்காவிலும் கொரோனா வைரஸ் இன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதால் பிரித்தாணியா அரசு சிறீலங்காவுக்கு செல்லும் தனது பயணிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளின் அலுவலகமே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கணடறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை தடுப்பதற்கு சிறீலங்கா அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. 24 மணி நேர அவசர நடவடிக்கை பிரிவு ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.

எனவே அங்கு செல்லும் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்வதுடன், அரசின் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு சிறீலங்கா செல்லும் பிரித்தானியா சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.