சிரியாவில் மின்னணு துப்பாக்கியை பிரயோகிக்க அமெரிக்க இராணுவம் முடிவு

லினக்ஸ் மென்பொருள் மூலம் இயங்கும், புதிதாகத் தயாரிக்கப்பட்ட மின்னணு துப்பாக்கியை சிரியாவில் பயன்படுத்தி பார்க்கவுள்ளதாக அமெரிக்க இராணுவம் முடிவு செய்துள்ளது.

இந்த துப்பாக்கி குறிப்பிட்ட நபரை துல்லியமாகத் தாக்கும் வசதி கொண்டது. ஆயுததாரியாக எதிரில் நிற்பவரை மட்டுமே இந்த துப்பாக்கியால் சுடமுடியும்.  எதிரில் நிற்பவர் ஆயுதம் வைத்திருக்காத சமயத்தில் அவரை சுடுவதற்கு துப்பாக்கியிலுள்ள கணனி ஒத்துழைப்பு வழங்காது.

SMASH 2000  என அழைக்கப்படும் இந்த வகையான துப்பாக்கிகளை, தாக்குதல் அதிகம் நடக்கும் சிரியாவின் அல் டான்ஃப் இராணுவத்தளப் பகுதிகளில் பரீட்சார்த்த முறையில் சோதனை செய்ய அமெரிக்க இராணுவம் முடிவு செய்துள்ளது. இந்தத் துப்பாக்கிகள் மூலம் நிராயுதபாணிகள் கொல்லப்படுவது தவிர்க்கப்படும் என அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.