சிங்கள அரசு கொடுத்த பணியை சிறப்பாக செய்யும் வடக்கு ஆளுநர்

போக்குவரத்து சட்ட விதிகளை மீறும் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனைச் சீட்டு மூன்று மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனால் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனைச் சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைகளுடன் அறிந்து கொள்ள முடியும்.

தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நடைமுறைக்கான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் காலம் நெருங்கி வரும் வேளையில் தமிழர்களின் அபிலாசைகளை தான் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக் கொள்கின்றார் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இத்தகைய சிறிய சலுகைகளை தமிழ் மக்களுக்கு வழங்குவதன் மூலம், தமிழர்களின் வலுவான வாக்குகளை தம்வசம் ஈர்த்துக் கொள்வதற்காகவே இவற்றையெல்லாம் செய்கின்றார்கள் என்பதை தமிழர்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள்.

சிங்கள பொளத்த துறவிகள் மேற்கொள்ளும், நில ஆக்கிரமிப்புக்கள், அவர்கள் மேற்கொள்ளும் தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பிலோ எந்த நடவடிக்கைiயும் எடுப்பதற்கு சிங்கள அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் முயற்சி செய்வதில்லை.

தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து சிறீலங்கா படையினரின் நடவடிக்கை தொடர்பிலோ, நீராவியடி விவகாரம் தொடர்பிலோ, இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலோ நடவக்கைளை மேற்கொள்ளாத ஆளுநர், சிங்கள அரசின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறிய நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.