சிங்களப் பெண்ணின் கழுத்தை அறுத்த சிப்பாயையும் கோத்தபாயா மன்னிப்பாரா?

கடந்த 22 ஆம் நாள் யாழ் பண்ணைக் கடற்கரைப் பகுதியில் சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவர் அவரது முன்னாள் மனைவியும், யாழ் மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவியுமான றோசினி என்பவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்திருந்தார்.

2000 ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் நாள் யாழ் மிருசுவில் பகுதியில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 தமிழ் மக்களை றோசினியை போலவே சிங்களச் சிப்பாய் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் 4 பேர் சிறுவர்கள்.

எந்தவொரு இராணுவச் சிப்பாயும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என கடந்த வருடம் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் சிங்கள மக்களுக்கு வாக்களித்த பௌத்த சிங்கள அரச தலைவர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தமிழ் மக்களை படுகொலை செய்த சுனில் ரட்நாயக்கா என்ற அந்த சிப்பாயை விடுதலை செய்திருந்தார்.

ஆனால் தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவெனில் சிப்பாய்களை தண்டிப்பதில்லை என்ற கொள்கையை உடைய சிறீலங்கா அரச தலைவர் றோசினியின் கழுத்தை அறுத்த சிப்பாயையும் மன்னிப்பாரா என்பது தான்?

ஆனால் சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும், சிங்கள சமூகத்திற்கு ஒரு நீதியும் நடைமுறையில் உள்ளது என்பது நாம் அறிந்ததே.