சாதியை படிப்படியாக ஒழிக்க அரசு விரும்புகிறது – அமைச்சர் தனஞ்சய் முண்டே

மாகாராஷ்ட்ராவில் சாதியை படிப்படியாக ஒழிக்க அரசு விரும்புகிறது என்று அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே கூறியுள்ளார்.

மகாராஷ்ட்ர  மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மறுபெயரிடுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இது குறித்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சமூக நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் காப்பதற்காக, இந்தத் திட்டத்தை அரசு முன் வைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், “’மஹர்-வாடா, போத்-வாடா, மங்-வாடா, தோர்-வஸ்தி, பிரம்மன்-வாடா மற்றும் மாலி-கல்லி’ போன்ற பெயர்கள் அந்த பகுதிகளில் வாழும் சமூகத்தை குறிக்கும் விதமாக உள்ளது. இது மகாராஷ்டிரா போன்ற முற்போக்கான மாநிலத்திற்கு சரியல்ல.” என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பெயர்கள் இறந்த விலங்குகளை அப்புறப்படுத்தும் சமூகமாகவும் தோட்டக்காரர்களாகவும் உள்ள தலித்துகள், பௌத்த தலித்துகள்  போன்றவர்களை குறிக்கின்றன

இனி இப்பெயர்கள் சமதா நகர், பீம் நகர், ஜோதிநகர், ஷாஹுநகர், கிரந்தி நகர் என்று மாற்றப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.