Tamil News
Home செய்திகள் சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் பயணத் தடை நீக்கப்படாது – பொம்பியோ

சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் பயணத் தடை நீக்கப்படாது – பொம்பியோ

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரிவரும் நிலையில், அதை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ நேற்று நிராகரித்தார்.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடை தொடரும் என்று கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மைக் பொம்பியோ தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கச் சட்டத்தின் பிரகாரமே பயணத் தடை விதிக்கப்பட்டது. சட்ட ரீதியாக அது சரியானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகின்றோம். அவருடைய பயணத் தடையை விலக்கிக்கொள்வது குறித்து உடனடியாகப் பரிசீலிக்கப்படாது.”

Exit mobile version