சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாமல் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அரசு திட்டம்

சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாமல் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் 20ஆவது திருத்தச்சட்டவரைவை நிறைவேற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டவரைவு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 4 சரத்துகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகளை நீக்கிவிட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் மாத்திரம் 20 ஐ நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.