Tamil News
Home செய்திகள் சபாநாயகருக்கு எதிராக ஜே.வி.பி. வாக்களிக்கும் – விஜித ஹேரத் தெரிவிப்பு

சபாநாயகருக்கு எதிராக ஜே.வி.பி. வாக்களிக்கும் – விஜித ஹேரத் தெரிவிப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க தாம் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். வாக்கெடுப்பில் சபாநாயகருக்கு எதிராக நாம் வாக்களிப்போம். கடந்த காலங்களில் சபாநாயகர் செயற்பட்ட விதம் மிகவும் தவறானது. பொலிஸ் மா அதிபர் நியமனம் விடயத்தில் அவர் செயற்பட்டமை சட்டவிரோதமானது. சபாநாயகர் அரசியலமைப்பையும் பாரளுமன்ற சிறப்புரிமைகளையும் மீறிச் செயற்பட்டுள்ளார்” என்றார்.

Exit mobile version