கொழும்பு விஜயத்தில் பொம்பியோ எழுப்பப்போகும் கேள்விகள்; அமெரிக்க அதிகாரி தகவல்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ கொழும்புக்கான தனது பயணத்தின்போது, மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் தொடர்பான பொதுவான அர்ப்பணிப்பு போன்ற விடயங்கள் குறித்து இலங்கை அரசிடம் கேள்வி எழுப்புவார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலாளர் டீன் தோம்சன் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையுடன் நேர்மறையான ஒரு கலந்துரையாடலை வடிவமைக்கப் பார்க்கிறோம் என்றும், வெளிப்படையான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான, தெரிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கையை ஊக்குவிப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலச் செழிப்புக்காக இலங்கையின் பொருளாதார சுதந்திரத்தை பாதுகாக்கக் கடினமான, ஆனால் தேவையான முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலக உயர் அதிகாரி மேலும் கூறினார்.