கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய 120 திமிங்கிலங்கள்

கொழும்பு கடற்கரையில் திடீரென 120 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு கடற்கரைக்கு தெற்கே 25 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (02) பனடூரா பகுதியில் குட்டை துடுப்புகளைக் கொண்ட  சுமார் 120 ‘முன்னோடித் திமிங்கிலங்கள்’  கரை ஒதுங்கின. 6மீற்றர் நீளமும் ஒரு தொன் எடையும் கொண்ட இந்தத் திமிங்கிலங்களை கடலில் விட கடற்படையினர் முடிவெடுத்தனர்.

இதற்காக கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் இன்று காலை (03) அவற்றை கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 3 திமிங்கிலங்கள் கரையை அடையும் போது ஏற்பட்ட காயத்தினால் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான மிகப்பெரிய எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரையை அடைவது அசாதாரணமானது” என்று இலங்கையின் கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.