கொரோனா வைரஸ் – மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,000

கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் உள்ள 177 நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (29) தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 10,779 பேர் மரணமடைந்துள்ளனர், இன்று 756 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர்.

அதற்கு அடுத்த நிலையில் ஸ்பெயின் உள்ளது. அங்கு இதுவரையிலும் 6,528 பேர் மரணமடைந்துள்ளனர், இன்று 838 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர்.

நேற்று ஸ்பெயினில் 832 பேரும், இத்தாலியில் 889 பேரும், பிரித்தானியாவில் 260 பேரும், பிரான்ஸ் இல் 319 பேரும் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையில் 1,700 பேர் மரணமடைந்துள்ளதுடன், 115,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் இல் 2,606 பேர் மரணமடைந்துள்ளர். இன்று அங்கு 292 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இன்று 209 பேர் மரணமடைந்துள்ளனர், அங்கு இதுவரை 1,228 பேர் மரணமடைந்துள்ளதுடன், 19,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் இது வரை 700,000 இற்கு அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 149,000 பேர் குணமடைந்துள்ளனர்.

அயர்லாந்தில் இன்று 10 பேர் இறந்துள்ளனர், மொத்தமாக அங்கு 46 பேர் பலியாகியுள்ளதுடன், 2,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுவிற்சலாந்தில் 257 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 14,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 2,191 பேர் பலியாகியுள்ளதுடன், 124,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் 61 பேர் உயிரிழந்ததுடன், 5,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் 771 பேர் பலியாகியுள்ளதுடன், 10,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.