கொரோனா முழுமையாக கட்டுக்குள் வருவது சாத்தியமில்லை – பவ்ரல் அமைப்பு

கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமில்லை என்பதால் சிறீலங்கா தேர்தல் ஆணையகத்தின் கட்டுப்பாடுகளின்படி தேர்தலை நடைபெற்றால் அதனை கண்காணிக்க தயாராக உள்ளதாக நீதியானதும் நேர்மையானதுமாக தேர்தல் மக்கள் நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அதன் பணிப்பாளர் றொகனா கெட்டியாராட்சி இன்று (11) தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பூச்சியமாகும் வரை கதாத்திருப்பது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

எனவே கொரோனா வைரஸ் நெருக்கடிகளின் மத்தியிலும், தேர்தல் ஆணையகத்தின் விதிகளின் பிரகாரம் தேர்தல் இடம்பெற்றால் அதனை கண்காணிக்க எமது அமைப்பு தயாராக உள்ளது.

தேர்தலில் முழுமையான நடைமுறைகளையும் நாம் கண்காணிப்போம். தொற்று நோயை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம். அரசியல் கட்சிகளின் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.