Home செய்திகள் கொரோனா நோயாளர்கள்! பரிசோதனைக்கான கேந்திர மையமாகும் வவுனியா நகரம்!

கொரோனா நோயாளர்கள்! பரிசோதனைக்கான கேந்திர மையமாகும் வவுனியா நகரம்!

வவுனியாவில் இன்று அதிகாலை வரையிலும் 449 கோரோனா வைரஸ் நோயாளர்கள் அழைத்து வரப்பட்டு பல்வேறு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் வவுனியா நகரம் பிரதான கோரோனா வைரஸ் பரிசோதனை நிலையமாக மாற்றமடைந்து வருகிறதா என பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிற்கு கடந்த 13ஆம் திகதி 265 கோரோனா வைரஸ் தொற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் விமான நிலையத்திலிருந்து பொலிசாரின் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் 16ஆம் திகதி மேலுமொரு தொகுதி 134 கேரோனா நோயாளர்கள் எனச்சந்தேகிக்கப்படும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து விமான நிலையத்திற்கு வந்திறங்கியவர்கள் பெரியகட்டு இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று அதிகாலை பூவரசன்குளம் வேலங்குளம் விமானப்படை முகாமிற்கு 15பெண்கள் , 35 ஆண்கள் உட்பட 50பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தற்போது வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 449ஆக அதிகரித்து வருகின்றனது.

இந்நடவடிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுவதுடன் கோரோனா வைரஸ் நோய்த் தொற்குற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளதுடன் வவுனியா பிரதான கோரோனா வைரஸ் நோய் தொற்றிற்குள்ளானவர்களை தனிமைப்படுத்தம் முகாமாக மாற்றமடைந்து வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளதுடன் பொதுமக்கள் மத்தியில் அச்ச நிலையையும் ஏற்படுத்திவருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

aaa 1 1 கொரோனா நோயாளர்கள்! பரிசோதனைக்கான கேந்திர மையமாகும் வவுனியா நகரம்!

Exit mobile version