Tamil News
Home செய்திகள் கொரோனா தாக்கம் : ஆபத்தான நிலையில் சில நாடுகள் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தாக்கம் : ஆபத்தான நிலையில் சில நாடுகள் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தாக்கம் பல்வேறு உலக நாடுகளில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில், “அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும். சில நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன. நாம் கொரோனாவிற்கு எதிரான போரில், குறிப்பாக வடக்கு அரைக்கோளத்தில் இருக்கும் நாடுகள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்றன.

அநாவசியமான மரணங்களைத் தடுக்கவும், அடிப்படை சுகாதார சேவைகளின் வீழ்ச்சியை நிறுத்தவும், பள்ளிகளை மீண்டும் மூடப்படாமல் இருக்கவும் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, வடக்கு ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

வைரஸ் பரவுவதை விரைவாகக் கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனை மேம்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறிதல் மற்றும் வைரஸ் பரவும் அபாயத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்தல் போன்றவற்றை தடையின்றித் தொடர வேண்டும்” என்றார்.

Exit mobile version