Tamil News
Home செய்திகள் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் – முதற்கட்டமாக 20 வீதமானோருக்கு வழங்கப்படும்

கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் – முதற்கட்டமாக 20 வீதமானோருக்கு வழங்கப்படும்

கொரோனா பரவலைக் குறைக்க உதவும் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 20 வீதமானோருக்கான தடுப்பூசியைப் பெறுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் குறைக்க உதவும் தடுப்பூசியைப் பயன்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் ரசியா பென்ட்ஸே கலந்துகொண்டார்.

இதன்போது, தடுப்பூசியை பெறுவது தொடர்பில் நிதியுதவி பெறுதல், தடுப்பூசி போட வேண்டியவர்களை தெரிவு செய்வது சுகாதார ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் பற்றி ஆராய சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டது.

Exit mobile version