கொரோனா தடுப்பூசி – ஆற்றில் குதித்த மக்கள்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடச் சென்றவர்களை கண்ட மக்கள், தங்களை கொல்லவருவதாக நினைத்து நதியில் உதித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட சுகாதார அதிகாரிகள் தங்கள்   உத்தரப் பிரதேச கிராமமொன்றுக்கு சென்ற போது அந்த கிராமத்தில் உள்ள மக்களே இவ்வாறு, அதிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த சரயு நதியில் குதித்துள்ளனர்.

பாராபங்கி மாவட்டத்தில் உள்ள சிசார்ஹாஎனும் கிராமத்தில் இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.

இது தடுப்பூசி அல்ல விஷ ஊசி என்று சிலர் சொன்னதால் தாங்கள் நதியில் குதித்து தப்பிக்க முயன்றதாக உள்ளூர் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து தாம் எடுத்துக் கூறிய பின்பு அந்த ஊரில் இருந்த 18 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்று ராம் நகர் துணை ஆட்சியர் ராஜீவ் குமார் சுக்லா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.