கொரோனா சமூகப் பரவல் ஆகியுள்ளதை அரசு மறைக்கின்றது – லக்‌ஷ்மன் கிரியெல்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என அரசு கூறினாலும் வைரஸ் சமூகப் பரவலாகிவிட்டது என்று   ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11,744 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 23ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 6ஆயிரத்து 140 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சை யளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 581ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கை இன்று 183 ஆக அதிகரித்துள்ள நிலையில்,களுபோவில, ராஜகிரிய, களனி ஆகிய பகுதிகளிலுள்ள மூன்று அதிரடிப்படையின் முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் சமூகப் பரவலாகிவிட்டது எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரசு மட்டுமே இந்த உண்மைகளைத் தொடர்ந்தும் மறைத்துக் கொண்டுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.