கொரோனா- இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய பிரேசில்

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரேசில் அரசு திணறி வருகிறது.

கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் அதிகம் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது.

அந் நாட்டில் ஒரே நாளில் 90,830 பேர் கொரோனா தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,736 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரேசில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மக்கள் வார இறுதி விழாக்களில் பங்கேற்பதை தவிர்க்குமாறும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பிரேசில் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 18 இலட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 26 இலட்சத்து 91 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.