கொரோனா அச்சம் – மட்டக்களப்பில் கல்வி நிலையங்களை மூட முடிவு

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தற்போது நாடு கொரோனா அச்சுறுத்தலுக்கு மீண்டும் உள்ளாகிவரும் நிலையில் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

IMG 0022 கொரோனா அச்சம் - மட்டக்களப்பில் கல்வி நிலையங்களை மூட முடிவு

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தல்,தனியார் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பேணும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,வெளியிடங்களில் வருவோர் தொடர்பிலான அவதானங்களை செலுத்துதல்,உள்ளுராட்சிமன்றங்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளுதல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.

கம்பஹாவில் இருந்து வருகைதந்த கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் எவரும் தொற்றுக்குள்ளாகவில்லையென தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், எனினும் அவர்கள் தொடர்ச்சியாக தனிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு மேலும் ஒரு தடைவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

IMG 0040 கொரோனா அச்சம் - மட்டக்களப்பில் கல்வி நிலையங்களை மூட முடிவு

கடந்த காலத்தில் பொதுமக்கள் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றினார்களோ அந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம்கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.