Tamil News
Home செய்திகள் கொரோனாவை  கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனாவை  கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் அவசியமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முடக்கல் நிலையால் கூட கொரோனா வைரஸ்பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் பரவிய பி.1.1.7 திரிவு வைரஸ் பரவலே  இலங்கையில் உயிரிழப்பு மற்றும் கொரோனா தொற்று அதிகரிக்க  காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் படி இலங்கை தற்போது கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது.  ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 406 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களினாலும் கொரோனா தொற்று அதிகரிப்பதாக கூறப்படுகின்றது.

முன்னதாக விமான நிலையங்களை மூடுவது குறித்து இதுவரை இறுதி முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  தெரிவித்திருந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவிவரும் ஆபத்தான கொரோனாவால், விமான நிலையங்களை மூடுமாறு சுகாதார வல்லுநர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின உதவி செயலாளர் நவீன் டி சொய்சா  கூறுகையில்,

தடுப்பூசிகள் என்பன வைரஸ்பரவலை கட்டுப்படுத்துகின்ற பக்க விளைவுகளை தடுக்கின்ற ஒரு வழிமாத்திரமே. தடுப்பூசிகளை அதிகரிக்கவேண்டும்  சில நாடுகள் இன்னமும் தடுப்பூசிகளை வழங்குவதை ஆரம்பிக்கவில்லை. தடுப்பூசிகளை பெறுவது இலகுவான விடயமல்ல.

இவ்வாறான சுழ்நிலையில் அரசாங்கம் ஏன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்த அலட்சியத்துடன் மக்கள் நடமாடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியது.

நாடு மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள நாட்டை முடக்கவேண்டும்.   பிசிஆர் சோதனைகளை அதிகரிக்காமல் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. அதிகரிக்கும் எண்ணிக்கையை மருத்துவமனைகளால் சமாளிக்க முடியாது” என்றார்.

Exit mobile version