கொட்டும் மழையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்-வீடியோ இணைப்பு

மனித உரிமைகள் தினமான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராடிவரும் காணாமல்ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள்,

m1 கொட்டும் மழையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்-வீடியோ இணைப்புm2 கொட்டும் மழையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்-வீடியோ இணைப்பு

முடிவடைந்த இனப்போரின் பத்து ஆண்டுகளிற்கு பின்னர் 145000 இறந்தவர்களிற்கும்ல் 35 ஆயிரத்திற்கும்.

மேற்பட்ட பலவந்தமாக காணாமல் போனவர்களின் நீதி மற்றும் பொறுப்பு கூறலிற்காக தமிழர்கள் ஏங்கி நிற்கின்றார்கள்.எனவே தமிழர்களின் அரசியல் விருப்பை கண்டுபிடிக்க ஜக்கியநாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழான வாக்கெடுப்பு தேவை என கோரிக்கை எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

m3 கொட்டும் மழையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்-வீடியோ இணைப்பு

இதே வேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே,இழப்பீட்டு அலுவலகம் எமக்கு தேவையில்லை, ஓ.எம்.பி.வேண்டாம் போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

m4 கொட்டும் மழையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்-வீடியோ இணைப்பு

m6 கொட்டும் மழையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்-வீடியோ இணைப்பு

m5 கொட்டும் மழையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்-வீடியோ இணைப்பு