Tamil News
Home உலகச் செய்திகள் கைகளைக் கட்டி நடக்க வைக்கப்பட்ட தலித் சிறுவர்கள் – இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள்...

கைகளைக் கட்டி நடக்க வைக்கப்பட்ட தலித் சிறுவர்கள் – இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

பஞ்சாபின் சிங்க்ரூர் மாவட்டத்தில் 11 முதல் 13 வயதுடைய நான்கு தலித் சிறுவர்கள் கைகள் கட்டப்பட்டு நான்கு கிலோமீட்டர் துாரம் நடக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு இவ்வாறு நடத்தப்பட்டுள்ளனர் என்று தி வயர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சிங்க்ரூர் மாவட்டத்தின் துாரி துணை பிரிவில் உள்ள பன்போரி மற்றும் பாசவுர் கிராமங்களுக்கிடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு மனு ஒன்றும்  குறித்த சிறுவர்களின் பெற்றோர்களினால் கொடுக்கப்பட்டுள்ளதாக தி வயர் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில்  ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிராக  தினம் பல வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

கடந்த வாரம் கோயிலில் குடிநீர் குடித்த ஒரே காரணத்திற்காக ஆசிப் என்ற சிறுவன் ஈவிரக்கமின்ற தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version