Tamil News
Home செய்திகள் குட்டிமணிக்கு ஒரு நீதி பிரேமலாலுக்கு ஒரு நீதி – சஜித்

குட்டிமணிக்கு ஒரு நீதி பிரேமலாலுக்கு ஒரு நீதி – சஜித்

மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டிமணி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு அரச விதிகளில் இடமில்லை என்று தெரிவித்த சிறீலங்கா அரசு தற்போது அதேபோன்று மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு அனுமதி வழங்கியுள்ளது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1982 ஆம் ஆண்டில் ரெலோ அமைப்பின் தலைவரான குட்டிமணி என்ற செல்வராஜா யோகச்சந்திரனை நாடாளுமன்ற உறுப்பினராக குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், அன்றைய சபாநாயகர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கை அரசமைப்பின் 89 மற்றும் 91 ஆம் உறுப்புரிமைகளை ஆதாரம் காட்டி அவரின் நியமனம் நிராகரிக்கப்பட்டது. அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த நிலையிலேயே அவருக்கு பதவி நிராகரிக்கப்பட்டது.

ஆனால் தற்போது சிறீலங்கா பொதுஜன முன்னனியைச் செர்ந்த பிரேமலால் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அவ்வாறாயின் தற்போதைய சபாநாயகர் அரசமைப்பை மீறி நடந்துகொண்டுள்ளார் என்றே கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version