Tamil News
Home செய்திகள் குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளை மட்டும் விலக்கி வைத்திருப்பது ஏன்?-சிவசேனை எம்.பி

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளை மட்டும் விலக்கி வைத்திருப்பது ஏன்?-சிவசேனை எம்.பி

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளை மட்டும் விலக்கி வைத்திருப்பது ஏன்? என சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியக் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஏற்கனவே இந்திய மக்களவையில் நிறைவேறிய நிலையில், இன்று புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் பேசுகையில், மசோதா குறித்த சந்தேகங்களை மத்திய அரசு முறையாக தீர்க்காவிட்டால், மசோதாவுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம். எனவே, மசோதாவுக்கு ஆதரவளிப்பது குறித்து மாநிலங்களவை விவாதத்திற்கு பிறகே முடிவெடுப்போம். மசோதாவில் பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த எங்களுக்கு சுதந்திரம் இல்லையா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மீண்டும் பிளவு ஏற்பட இந்தியாவில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது ஏன்?

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்துக்களைப் பற்றி மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் இந்து அகதிகளை ஏன் மசோதாவில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள்? இந்த பிரச்னையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது. குடியுரிமை மசோதா மூலமாக பாஜக வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவது சரியல்ல. இது மனிதத்துடன் தொடர்புடைய விஷயம். அதனை மதத்துடன் ஒருபோதும் தொடர்புபடுத்தக்கூடாது’ என்று தெரிவித்தார்.

Exit mobile version