கிழக்கு முனையம் குறித்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கருத்து

கிழக்கு முனையத்தை முழுமையாக இந்தியாவுக்கு வழங்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம் இந்தியாவுக்கும் 51 வீத உரிமம் இலங்கை துறைமுக அதிகார சபை வசம் இருக்கும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றார்.

மேலும் கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.