Tamil News
Home செய்திகள் உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய பகுதியை தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்க முயற்சி

உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய பகுதியை தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்க முயற்சி

கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய சூழலிலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து ஆராய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு குருந்துார் மற்றும் படலைக்கல்லு (கல்யாணணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள்  என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்விக அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அதே போல் நிலாவரை கிணறு பகுதிகளிலும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந் நிலையில் உருத்திரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய  பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் வந்து சென்ற பின்,பொலிசார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து அவ்விடத்தை பார்த்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களம் குறித்த சிவன் ஆலய சூழலை இலக்கு வைத்துள்ள நிலையில் பௌத்த பிக்கு, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் என வரிசையாக திடீரென வந்து ஆராய்ந்து சென்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Exit mobile version