Tamil News
Home செய்திகள் கிளிநொச்சி : இரணைமடு விவசாயிகள் போராட்டம்

கிளிநொச்சி : இரணைமடு விவசாயிகள் போராட்டம்

நெல்லுக்கான விலையினை உரிய நேரத்தில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுவதில்லை என தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நெல் சந்தைப்படுத்தல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து. அங்கு விவசாயிகள் தொடர்பில் மனு கையளிக்கப்பட்டது.

தற்பொழுது நெல்லினை 48 தொடக்கம் 50ரூபாய்க்கே கொள்வனவு  நடைபெறுவதாகவும், தமக்கு அறுவடை முடிவில் செலவீனமே 85 ரூபாய் முடிவடைகின்றதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபையினர் அவர்களின் களஞ்சிய சாலைகள் அனைத்துமே வெறுமனே காணப்படுவதாகவும், இருப்பினும் நெல் கொள்வனவு உரிய காலத்தில் உரிய விலையில் கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

மனுவை மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகனிடமும், நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் கையளிக்கப்பட்டன.

Exit mobile version