Tamil News
Home உலகச் செய்திகள் காட்டுத்தீயால் எரிகின்றது கனடா – வளிமண்டலம் மாசாகின்றது

காட்டுத்தீயால் எரிகின்றது கனடா – வளிமண்டலம் மாசாகின்றது

என்றுமில்லாதவாறு இந்தவருடம் கனடாவில் காட்டுத்தீ  மிகவும் அதிகளவில் பரவி வருகின்றது. கடந்த புதன்கிழமை (7) கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 400 இடங்களில் தீ எரிவதாகவும், அதில் 239 இடங்களில் எரியும் தீ அணைக்கமுடியாத அளவுக்கு பரவிவிட்டதாகவும் கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

கியூபெக் மனிலத்தில் மட்டும் கடந்த புதன்கிழமை 160 இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது. பல மானிலங்களில் இருந்து பல பத்தாயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 20,000 இற்கு மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இந்த தீயினால் இதுவரையில் 9.4 மில்லியன் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயின் புகையினால் வானத்தின் நிறம் மாறியுள்ளது. மஞ்சள் மற்றும் சாம்பல் நிறமாக வானம் காட்சி தருகின்றது என கனடாவின் காலநிலை மாற்ற பாதுகாப்பு நடைவடிக்கை அமைப்பின் தலைவர் கரோலின் போலெற்றே தெரிவித்துள்ளார்.

இந்த அனர்தத்திற்கு காலநிலை மாற்றமே காரணம். ஒட்டாவா, மொன்றியல் மற்றும் ரெரொன்டோ ஆகிய பகுதிகளில் வானத்தின் நிறம் மாறியுள்ளதுடன் தீ எரிவதன் வாசனையையும் உணரமுடிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் இருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் வொசிங்டன் நகரங்களிலும் புகைமூட்டம் காணப்படுகின்றது. கனடா முழுவதிலும் காற்று மாசுபடுதலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version