Home செய்திகள் கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் – தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசு

கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் – தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசு

சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களின் தயாகப்பிரேதங்களை காப்பாற்றுவதற்கு தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று (16) பெருமளவான மக்கள் திருமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் கூடி தமது எதிர்ப்பை பெருமபான்மை சிங்கள அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

பௌத்த ஆலயங்களை அமைப்பதன் மூலம் முதலில் நில ஆக்கிரமிக்பையும் பின்னர் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு தற்போது தமிழ் மக்களின் தொன்மையான கலாச்சார மையாமாகத் திகழும் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை ஆக்கிரமிப்பதை எதிர்த்து தமிழ் மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

பல இடங்களில் இருந்தும் தமிழ் மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு சென்றபோதிலும், சிறீலங்கா அரசு அதன் இராணுவத்தின் மூலம் பல இடங்களில் மக்களைத் தடுத்துள்ளது.

திரியாய் பகுதியில் மக்கள் சென்ற பேரூந்தை தடுத்த சிறீலங்கா இராணுவம் அதில் சென்றவர்களை போராட்டத்திற்கு செல்லவிடாது தடுக்க முற்பட்டதுடன், பேரூந்தின் சக்கரமும் காற்றுப்போயுள்ளது தமிழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

kanniya2 கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் - தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசு

Exit mobile version