கனேடிய தமிழ் முதலீட்டாளர்களை குறிவைக்கும் சிறீலங்கா

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள முதலீட்டாளர்களை நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது.

அதன் முதல் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை (11) சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சாவுக்கும் கனடாவைத் தளமாகக் கொண்ட ஒரு சில தமிழ் முதலீட்டாளர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டிருந்தார். வடக்கு-கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் திட்டங்கள் இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் வடக்கு கிழக்கில் பலவந்தமான சிங்கள குடியேற்றங்களை சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் நிலையில் அங்கு மேற்கொள்ளப்படும் முதலீடுகளை சிங்கள குடியேற்ங்களுக்கு சிங்கள அரசு பயன்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மக்களை ஏமாற்ற சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் மற்றுமொரு நடவடிக்கை என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.