கதிரியக்க பொருட்களுடன் நுழைந்த கப்பல் -உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

கதிரியக்க பொருட்களுடன் ஹம்பாந்தோட்ட துறைமுகத்திற்குள் நுழைந்த கப்பலின் உள்ளூர் முகவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டலிருந்து சீனாவுக்கு செல்லும் கப்பல் தொழில்நுட்ப சிக்கலால் செவ்வாயன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது.

இதன் போது அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் பங்குகள் உள்ளிட்ட ஆபத்தான சரக்குகள் குறித்த கப்பலில் ஏற்றிச் செல்வதாக அறிவிக்கப்படவில்லை.

இது போன்ற ஆபத்தான பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கப்பல் இயக்குனர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியை பெற வேண்டும்

எனினும் அவ்வாறான அனுமதியினை குறித்த கப்பல் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளாததனால் கப்பலை உடனடியாக துறைமுகத்திலிருந்து வெளியேறுமாறு அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ரஞ்சித் அறிவித்திருந்த நிலையில், கப்பல் நேற்று வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.