Tamil News
Home செய்திகள் கட்டற்ற மண்ணகழ்வுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

கட்டற்ற மண்ணகழ்வுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான் சந்தனமடு ஆறு பகுதியில் அப்பகுதி மக்கள் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.

சித்தாண்டியின் சந்தனமடு ஆற்றுப் பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான,ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வினால் மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர் நோக்குக்கின்றனர்.பாதை மோசமாக பாதிக்கப்படுத்தல்ää ஆறு அகலமாக்கப்படுத்தல்,வெள்ள நீரினால் மக்கள் உயிர் ஆபத்தினை எதிர் கொள்ளுதல்ää உள்ளக மண் வளத்தினை உள்ளக தேவைக்குப் பயன்படுத்த முடியாதென்று பல விதமான சவால்களுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர் .

குறித்த பகுதியில் மண் அகழ்விற்கு 2015ஆம் ஆண்டு தொடக்கம் தடை விதித்துள்ள நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழையுடனான காலநிலையினை தொடர்ந்து இந்த சட்ட விரோத மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version