Tamil News
Home உலகச் செய்திகள் கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள்: மியான்மர் இராணுவத்துக்கு  அமெரிக்கா எச்சரிக்கை

கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள்: மியான்மர் இராணுவத்துக்கு  அமெரிக்கா எச்சரிக்கை

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மர் அரசைக் கவிழ்த்து இராணுவம் ஆட்சியைப் பிடித்துள்ளமைக்கு அமெரிக்கா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தேர்தலில் மோசடி செய்ததாக தேசிய ஜனநாயக லீக் கட்சியினரைக் கைது செய்ததாக மியான்மர் இராணுவம் கூறுகிறது. இப்போது ஆட்சியதிகாரம் இராணுவத் தளபதி மின் ஆங் லெய்ங்கிடம் உள்ளது. அத்துடன் அவர் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளார்.

இந்த பிரகடனத்தால் மியான்மர் மக்கள்  பாதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், ஐநா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட  நாடுகள் மியான்மரில் ஏற்பட்டுள்ள இராணுவப்புரட்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையடுத்து “சமீபத்திய தேர்தல் முடிவுகளை மாற்றும் எந்த ஒரு சக்தியையும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது. மியான்மரின் ஜனநாயக மாற்றத்துக்கு தடை ஏற்படுத்த அனுமதியோம். இப்போது ராணுவப்புரட்சியை வாபஸ்பெற்று தலைவர்களை விடுதலை செய்யவில்லை எனில் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டி வரும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version