Tamil News
Home உலகச் செய்திகள் ஓக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் தலைநகர் சீரழிந்துவிடும் – டெல்லி முதல்வர் தகவல்

ஓக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் தலைநகர் சீரழிந்துவிடும் – டெல்லி முதல்வர் தகவல்

ஓக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால் இந்தியத் தலைநகர் டெல்லி சீரழிந்துவிடும்  என  உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 பேருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 2,624 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,66,10,481 ஆக அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்பும் 1,89,544 ஆக  உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், ஓக்சிஜன் தட்டுப்பாடால் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில், “ மத்திய அரசிடம் இருந்து டெல்லிக்கு  வரும் ஓக்சிஜனை 480 மெட்ரிக் தொன்னாக உயர்த்தியிருக்கும் நிலையில், இதுவரையில் 280 தொன் ஓக்சிஜன் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் நிலைமை தொடர்ந்தால் டெல்லி முழுமையாக சீரழிந்து விடும்” என்று டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஓக்ஸிஜன்  வழங்குவதை மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அதிகாரிகள் யாரேனும் தடுத்தால், அந்த அதிகாரிகளை  தூக்கில் போடுவோம் என்று  டெல்லி உயர் நீதிமன்றம்   எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version