Tamil News
Home செய்திகள் ஒப்பந்தத்தின் படி செயற்பட வேண்டும் – கிழக்கு முனையம் விவகாரத்தில் இந்தியா அழுத்தம்

ஒப்பந்தத்தின் படி செயற்பட வேண்டும் – கிழக்கு முனையம் விவகாரத்தில் இந்தியா அழுத்தம்

2019ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை செயல்படும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக அறிக்கை மூலம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் நேற்று மாலை இந்திய உயர்ஸ் தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 மேயில் இலங்கை, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடையே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் கைச்சாத்தான ஒப்பந்தத்தின்படி இலங்கை செயல்படும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டது.

நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்தது .வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்து வதற்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்தது. இதற்கமைய, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும் ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version