Tamil News
Home செய்திகள் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கவலை அளிக்கின்றது- இந்தியா

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கவலை அளிக்கின்றது- இந்தியா

சிறீலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கவலை அளிக்கின்றது என ஐ.நாவில் இந்தியா தெரிவித்துள்ளது.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது சிறீலங்காவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் நேரடியாக பங்களிப்புச் செய்யும்  என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் “சிறீலங்காவில் போர் 2009ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த பின்,மனித உரிமைகள் தொடர்பான 7 தீர்மானங்களை இந்த பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் இந்தியா தீவிமாக பங்கேற்று வருகின்றது.  அதே போன்று சிறீலங்கா நட்பு நாடென்ற வகையிலும் அயலான் என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாட்டுடன் சிறீலங்காவிடையத்தில் முன்னின்று செயற்படுகின்றது.

சிறீலங்காவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு மற்றும் சமத்துவம், நீதி , அமைதி, கௌரவத்திற்கான தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிரதான துாண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடு உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version