Tamil News
Home செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது.

இதில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் 27 ஆம் திகதி வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார்.

இந்த முறை சிறிலங்கா அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான பிரதிநிதிகள் குழு பங்கேற்கவுள்ளது.

இந்த குழுவினர் நாளை (25) இலங்கையில் இருந்து ஜெனிவாவிற்கு பயணிக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட 30 கீழ் ஒன்று மற்றும் 2017 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட 34 கீழ் ஒன்று தீர்மானங்களின்படி இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள், மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்வதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

இதற்கமைய 30 கீழ் 1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என பிரித்தானியா தலைமையில் கடந்த 2009 ஆம் ஆண்டு 40 கீழ் 1 என்ற தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட இணை அனுசரனையை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Exit mobile version