ஐ.நாவில் சிறீலங்கா குறித்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு – இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில், சிறீலங்கா அரசிற்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகின்றது.

இந்த தீர்மானம், ்“மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடும் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீது சிறீலங்கா அரசு உடனடியான, முழுமையான, பாரபட்சமற்ற விசாரணையையும் தேவைப்பட்டால் வழக்குகளையும் நடத்துவதை உறுதி செய்ய வெண்டும்” என்று அழைப்பு விடுகின்றது.

சென்ற மாதம் மனித உரிமைகளுக்கான ஐ.நா ஆணையர் மிஷல் பஹலெட், சிறீலங்கா பற்றிய தனது அறிக்கையில், உள்நாட்டு நடைமுறைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும், சமரசத்தை வளர்ப்பதையும் செய்யத் தவறியுள்ளன” என்றும் “2015 -ல் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களுக்கு மாறாக இப்போதைய அரசாங்கம் முந்தைய அரசுகளைப் போலவே நேர்மையான பொறுப்பு நிகழ்முறையை பின்பற்றத் தவறியுள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

சிறீலங்கா அரசு சர்வதேச நாடுகள் மத்தியில் ஆதரவு திரட்டுவதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது என்றும் இந்த வாக்கெடுப்பு சிறீலங்கா அதிபர் கோட்டபயாவுக்கான ஒரு அக்னி பரீட்சை என்றும் தி ஹிந்து நாளிதழ் கூறியுள்ளது.

சிறீலங்காவுக்கு சீனா,  ரஷ்சியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லீம் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக சிறீலங்கா அதிபர் கோட்டபாயவும், பிரதமர் மகிந்தவும் உலக முஸ்லீம் நாட்டு தலைவர்களுடன் பேசியுள்ளனர்.

அதிபர் கோட்டபாய, 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் பொதுச் செயலாளர் யுசுப் 1மத் அல் கலிஃபாவுடனும் ஞாயிறன்று பேசியுள்ளதாக தீ ஹிந்து தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்த போது 2012க்கும் 2014க்கும் இடையே ஐ.நா மனித உரிமைகள் குழுவில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் மூன்று முறை நிறைவேற்றப்பட்டன என்பதை தி ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

 மேலும் இந்தியா, இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என்று சிறீலங்கா தரப்பு எதிர்பார்ப்பதாக தீ ஹிந்து கூறுகின்றது. மார்ச் 13ம் திகதி இந்திய பிரதமர் மோடியும் சிறீலங்கா  ஜனாதிபதி கோட்டபாயாவும் தொலைபேசியில் பேசிய போது இரு நாடுகளும் இரு தரப்பு ரீதியாகவும் பன்னாட்டு அமைப்புகளிலும் ஒத்துழைப்பது குறித்தும் பேசியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நட்டப் பேரவை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அரசு சிறீலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

திமுக,மதிமுக,பாமக ஆகிய தமிழகத்தின் முக்கிய கட்சிகள்  சிறீலங்காவுக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளன.

அத்தோடு கடந்த மாதம் மனித உரிமைகள் குழுவின் 46ஆவது அமர்வில் இந்தியாவின் துாதுவர் இந்தியா மனீஷ் பாட்டே “ சிறீலங்காவின் நலன்களை உறுதி செய்ய, தமிழ் சமூதாயத்தின் நியாயமான விருப்பங்களை உறுதி செய்வதை நாங்கள் வலியுறுத்திகிறோம்” என்று பேசியுள்ளார் என்று தி ஹிந்து கூறியுள்ளது.