Tamil News
Home செய்திகள் ஐ.நா சிறப்பு பிரதிநிதியின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா சிறப்பு பிரதிநிதியின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் – பிரித்தானியா

சிறீலங்காவுக்கு 2015 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி முன்வைத்த பரிந்துரைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை பிரித்தானியா தனது புதிய ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் முன்வைத்துள்ளது.

தீர்மானம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானியா இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளது. செயற்பாட்டு பந்தி 5 இல் இந்த கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கொரோனோ வைரஸின் தாக்கத்தினால் இறந்த முஸ்லீம் மக்களின் உடல்களை எரிப்பது என சிறீலங்கா தீர்மானித்ததாக நடவடிக்கை பந்தி 8 இல் இடம்பெற்ற வசனத்தை நீக்குமாறு சிறீலங்கா விடுத்த கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்திருந்தன. சிறீலங்கா புதிதாக அமைத்த ஆணைக்குழுவை ஏற்றுக்கொள்ளுமாறு பாகிஸ்தான் கோரியிருந்தது.

ஆனால் தீர்மானத்தை வலுப்படுத்துமாறு ஸ்கன்டநேவியன் நாடுகள் கோரியிருந்தன.

Exit mobile version