ஐ.நாவின் நடவடிக்கை என்பது வெறும் கண்துடைப்பாகும் – சவேந்திர சில்வா

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினர் மேற்கொண்டுவரும் பணிகளில் இருந்து சிறீலங்கா அரச படையினரை விலக்கி வைப்பது என்ற ஐ.நாவின் செயலானது வெறும் கண்துடைப்பான நடவடிக்கை என சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் உள்ள போதிமர பௌத்த ஆலயத்தில் இடம்பெற்ற கொடியேற்றும் வைபவத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வழமையாக ஐ.நா குறிப்பிட்ட காலத்திற்கே சில நாடுகளில் இருந்து அமைதிப்படையினரை பயன்படுத்துவதுண்டு. பல நாடுகளில் உள்ள படையினர் இவ்வாறு பயன்படுத்தப்படுவதுண்டு.

கெயிட்டி நடவடிக்கையின் போதும் சிறீலங்கா படையினரை ஐ.நா படிப்படியாக வெளியேற்றியிருந்தது. இறுதியில் எல்லோரும் வெளியேற்றப்பட்டனர். எனவே ஐ.நாவின் தற்போதைய நடவடிக்கை என்பது ஒரு கண்துடைப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.