Tamil News
Home செய்திகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் – பயங்கரவாத தடை சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய சிறீலங்கா அரசு இணக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் – பயங்கரவாத தடை சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய சிறீலங்கா அரசு இணக்கம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய தாம் தயாராக உள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிறீலங்கா அரசு ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சிறீலங்கா அரசுக்குமிடையிலான 23 ஆவது கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) இடம்பெற்றிருந்தது. இதன் போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் காரணமாக சிறீலங்கா அரசு நிபந்தனைக்கு இணைக்கம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளின் போது அனைத்துலக மனித உரிமை விதிகளை சிறீலங்கா அரசு பின்பற்ற வேண்டும். கொரோனோ வைரஸ் இன் நெருக்கடியை காரணம் காண்பித்து இறக்குமதிக்கான தடையை சிறீலங்கா அரசு விதித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது தொடர்பில் சிறீலங்கா அரசு உலக வர்த்தக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். சிறீலங்காவுக்கு இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெறவேண்டும் எனில் சிறீலங்கா அரசு மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளை மதிக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை சிறீலங்கா அரசு நீக்க வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு விலகியது கவலை தருகின்றது என ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version